பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் அக்கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தேர்தலையொட்டி கடந்த 23ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் ஷகாதோலில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பழங்குடியினர் மற்றும் ஆதிவாசியினரை ஒழித்துக் கட்ட கடுமையான சட்டத்தை கொண்டு வந்து அதை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு மோடி உத்தரவிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, மோடி குறித்து ராகுல் பேசியது குறித்து 48 மணி நேரத்தில் பதில் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Discussion about this post