சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 120க்கும் மேற்பட்டோர் காயமைடந்துள்ளனர்.
சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிசுவானில் 30 நிமிடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று இரவு 11 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2-வது நிலநடுக்கம் இன்று காலை மீண்டும் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆகவும், இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது. உயரமான கட்டிடங்களில் இருந்த மக்கள் கட்டிடம் குலுங்கியதை அடுத்து, அலறியடித்தபடி வீதிகளை நோக்கி ஓடி வந்தனர். சுமார் ஒரு நிமிடம் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நீடித்ததாக கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தால் சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 11 பேர் பலியாகி உள்ளதாகவும், 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்புப் படையினர் மீட்டு அருகில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 2008 ஆம் ஆண்டு மே மாதம் சிசுவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 70 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post