பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதைப் போல, செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை முதல்முறையாக நாசா புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள், பூகம்பங்கள் போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இன்சைட் விண்கலத்தை கடந்த ஆண்டு விண்ணில் செலுத்தியது. கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விமானப்படை தளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த விண்கலம், தற்போது செவ்வாய்கிரகத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
பூமியை போலவே செவ்வாய்கிரகத்திலும் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்து முதல்முறையாக எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தை, நாசா விண்வெளி ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ளது.
Discussion about this post