வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சென்னையின் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
ஆந்திராவின் காக்கிநாடாவில் இருந்து 296 கிலோ மீட்டர் கிழக்கு திசை தொலைவிலும், சென்னையில் இருந்து கிழக்கு வடகிழக்கே 320 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி ஒன்றாக பதிவான நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
குறிப்பாக, பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராயர் நகர், ஆழ்வார்பேட்டை, திருவான்மியூர் போன்ற இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
ஆந்திராவின் காக்கிநாடா, விஜயவாடா, நெல்லூர், திருப்பதி ஆகிய இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
Discussion about this post