நெதர்லாந்தில், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் பறக்க விடப்படும் ட்ரோன்களை (ஆளில்லா விமானம்) அழிக்க கழுகிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விஞ்ஞான உலகில் ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் பறக்கவிடப்பட்டு, பல்வேறு நன்மை செயற்பாடுகள் நடந்துள்ளன. ஆனால் தற்போது, மிகவும் அச்சுறுத்தும் விஷயமாக ட்ரோன் பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள காட்விக் விமான நிலையம் எப்போதும் பரபரப்பானது. இதன் ஓடுப் பாதையில் ட்ரோன் ஒன்று ரொம்ப நேரமமாக பறந்து கொண்டு இருந்தது. விசாரணையில் விதிகளுக்கு மாறாக பறந்த அந்த ட்ரோனை, வெளியேற்ற ராணுவம் வரவழைக்கப்பட்டது.
மேலும் இந்த ட்ரோன், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் இருந்ததால், விமானங்கள் மற்ற இடங்களுக்கு திருப்பி விடப்பட்டதுடன், மற்ற விமானங்களின் புறப்பாடும் ரத்து செய்யப்பட்டது. பல மணி நேர முயற்சிக்கு பிறகு அந்த ட்ரோன் வெளியேற்றப்பட்டது.
இதனையடுத்து, ட்ரோன் பறக்க விடவும், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் பறக்க விடப்படும் ட்ரோன்களை அழிக்க பல்வேறு நாடுகள் விதவிதமான யுத்திகளை பயன்படுத்தி வருகின்றன.
ட்ரோன்களை (ஆளில்லா விமானம்) அழிக்க கழுகிற்கு பயிற்சி
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் பறக்க விடப்படும் ட்ரோன்களை (ஆளில்லா விமானம்) அழிக்க கழுகிற்கு நெதர்லாந்து அரசு பயிற்சி அளித்துள்ளது. சந்தேகத்திற்கிடமாக பறக்கும் ட்ரோன்களை தன் நகங்களால் திசைதிருப்பி செயலிழக்க செய்கிறது.
இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்ட கழுகுகள், ட்ரோனை தவிர வேற எதையும் தாக்காது. ஒரு பறவையை கூடத் தாக்காது.
மற்ற நாடுகள் அச்சுறுத்தும் வகையில் பறக்க விடும் ட்ரோன்களை அழிக்க ‘ரேடார்’, ‘ஜாமிங்’, ‘நவீன துப்பாக்கி’, ‘எதிர்ப்பு ஒளிக்கதிர்கள்’ ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறது.
ட்ரோனை அழிக்க கழுகுகளை பயன்படுத்தும் நெதர்லாந்து, இது வெர்சன் 2.0 என மார் தட்டிக் கொள்கிறது.
Discussion about this post