ஒடிசாவில் தசரா விழாவை முன்னிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வண்ணமயமான உடையில் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தசரா திருவிழா வட மாநிலங்களில் களை கட்ட தொடங்கியுள்ளது. இதற்கான நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடைபெற்று வரும் நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில், சிறப்பு தாண்டியா நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு நடனமாடினர். வண்ண விளக்குகள் ஒளிர விதவிதமான உடைகளில் தோன்றிய அனைவரும் பாரம்பரிய தண்டியா நடனமாடி ஒருவருக்கொருவர் தசரா கொண்டாட்ட மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
Discussion about this post