தமிழகத்தில் 30 ஆயிரம் மெகாவாட்டிற்கு மின் நிறுவுதிறன் உள்ளதால், மின்தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டிற்கு வாய்ப்பு இல்லை என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மின்வாரியம், தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக தேவைப்படும் 15 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் பூர்த்தியாகியுள்ளது. எனவே மின்தட்டுப்பாட்டை போக்கும் விதமாக மின்வாரியத்தின் நிறுவு திறனும் தற்போது அதிகரித்துள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மின்வெட்டே இல்லாத மின்மிகை மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளதால், கோடைகாலங்களிலும் மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை அரசால் வழங்க முடியும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
Discussion about this post