தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் கடல் அலைகள் 3.4 மீட்டர் உயரம் வரை எழக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்ட நிலையில், மீன்பிடி படகுகள் உபகரணங்கள் பாதுகாப்பு இடங்களில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டம் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில், பக்தர்கள் புனித நீராடுவதற்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டது. இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Discussion about this post