கம்பம் சுருளி அருவியில் 4வது நாளாக குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
கம்பம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் ஒருவார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. கனமழை நீடிப்பதால், குளிப்பதற்கான தடை நீடிக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று விடுமுறை என்பதால் அருவிக்கு குளிக்க வந்த நூற்றுக்கணக்காண சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Discussion about this post