துபாயில் உள்ள துபாய் பிரேம் உலக கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
உலக சுற்றுலா தலமாக உள்ள துபாய்க்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் அதிகளவில் வருகை புரிகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் துபாய் அரசு சுற்றுலா தலங்களை அமைத்து வருகிறது.
அதன்படி கடந்த வருடம் துபாய் ஜபீல் பூங்கா அருகில் துபாய் பிரேம் என்ற புகைப்பட சட்ட வடிவிலான கட்டிடம் ஒன்று 25 ஆயிரம் கோடி திர்ஹாம் செலவில் கட்டப்பட்டது. 492 அடி உயரம் மற்றும் 305 அடி அகலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பிரேம் தற்போது உலகின் மிகப்பெரிய பிரேமாக தேர்வு செய்யப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
இதற்கான நிகழ்ச்சியில் வளைகுடா மண்டலத்திற்கான கின்னஸ் அதிகாரி தலால் உமர் பங்கேற்று கின்னஸ் சாதனை சான்றிதழை துபாய் மாநகராட்சி பொது இயக்குநர் தாபூத் அல் ஹாஜிரியிடம் வழங்கினார்.