தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் தரையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்; தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் மூடு பனி உருவாக வாய்ப்புள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னையைப் பொருத்தவரை ஆங்காங்கே வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பம் குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ் முதல் அதிகளவாக 29 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.