தமிழகம்,புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொருத்தவரை வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.

Exit mobile version