சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் காந்தசாமிக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நன்றி தெரிவித்துகொண்டார்.
சூலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டர். கந்தசாமியின் வெற்றியை மக்களுக்கு காணிக்கையாக்குவதாக தெரிவித்தார். விசமத்தனமான மற்றும் பொய் பிரச்சாரங்கள் மூலம் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் போதிய மழை பெய்யாததால் வறட்சி ஏற்படுத்துள்ளதாகவும், திமுகவின் போராட்டம் தேவையில்லாத ஒன்று என்றும் குறிப்பிட்டார்
Discussion about this post