ஆப்பிரிக்காவின் ஹக்ஸ்கீன்பன் பாலைவனத்தில், போர் விமானத்தின் என்ஜின் பொருத்தப்பட்ட உலகின் மிக வேகமான காரின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. “Bloodhound” என்று பெயரிடப்பட்ட இந்தக் காரினைத் இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர்கள் தயாரித்துள்ளனர். ஒரு லட்சத்து 35 ஆயிரம் குதிரைத் திறன் கொண்ட இந்தக் கார் மணிக்கு ஆயிரத்து 227 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவித்துள்ளனர். தற்போது மணிக்கு 537 கிலோ மீட்டர் வேகத்தில் கார் இயக்கப்பட்டதாகவும் வரும் வாரங்களில் வேகத்தை அதிகரித்து சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post