சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஆய்வில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரச்சான்று இல்லாமல் கொண்டு வரப்பட்ட குடிநீர் கேன்களை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு காலாவதியான குடிநீர் கேன்களில் அடைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் ஐஎஸ்ஐ மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையின் தரச் சான்றிதழ் இன்றி எடுத்து வரப்பட்ட 500க்கும் மேற்பட்ட தண்ணீர் கேன்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மேலும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Discussion about this post