காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 19 ஆம் நாளான இன்று, அத்திவரதர் நீல வண்ணப் பட்டாடை உடுத்தி ரம்மியமாக காட்சி அளித்தார்.
அத்திவரதர் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.. 19வது நாளான இன்றும் வழக்கம் போல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று வரை 20 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இன்று அத்திவரதர் நீல வண்ணப் பட்டாடை உடுத்தி, பச்சை நிற அங்கவஸ்திரம் சாத்தப்பட்டு, மிக அழகாக காட்சி அளிக்கிறார்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பொம்மை கிளி அத்திவரதருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை அத்திவரதர் வலது கையில் ஏந்தியபடி அழகாக காட்சியளிக்கிறார். மேலும் சுவாமிக்கு வெட்டி வேர்களால் ஆன நீண்ட மாலையில், பல வண்ண பூக்களால் ஆன மாலையும் சாத்தப்பட்டுள்ளது.
Discussion about this post