தொடர் கோவிட் பரவல், இரஷ்யா-உக்ரைன் போர், பருவநிலை மாற்றங்கள் போன்றவை உலகில் நடந்த வண்ணம் உள்ளது. இது போன்ற செயல்பாடுகளால் உலகம் தன் அழிவுப்பாதையை நோக்கி உள்ளது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மனித இனத்திற்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக புல்லட்டின் ஆஃப் அட்டாமிக் சயின்டிஸ்ட் என்ற விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு 1947ஆம் ஆண்டில் டூம்ஸ் டே கடிகாரம் என்ற கடிகாரத்தை வடிவமைத்தனர். இந்தக் கடிகாரம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தலைமையில் விஞ்ஞானிகள் சிலரின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டது ஆகும்.
உலகின் போக்கு எந்தமாதிரி உள்ளது என்று கண்காணிக்கும் உலகின் முன்னணி விஞ்ஞானிகள் இந்த கடிகாரத்தின் முள்ளை மாற்றி அமைப்பார்கள். கடிகாரத்தின் முள்ளானது நள்ளிரவு பன்னிரெண்டு மணியினைத் தொட்டால் உலக அழிவு தொடங்கியது என்று பொருள். பன்னிரெண்டு மணிக்கு அருகில் இருந்தால் உலக அழிவுதினம் அருகிலிருக்கிறது என்று பொருள். பன்னிரெண்டு மணிக்கு தொலைவில் இருந்தால் உலகம் நலமாக இருக்கிறது என்று பொருள். தற்போது மேற்குறிப்பிட்ட கோவிட் பரவல், இரஷ்யா-உக்ரைன் போர் போன்றவற்றினால் இந்த டூம்ஸ் டே கடிகாரத்தினை பன்னிரெண்டு மணிக்கு அருகில் கொண்டு வந்துள்ளார்கள். 12 மணியை எட்டுவதற்கு இன்னும் 90 நொடிகள் மட்டுமே உள்ளது. ஆகவே உலக அழிவு நாள் நெருங்கியுள்ளது என்று பொருள்படுகிறது.
Discussion about this post