காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தராக இருக்க தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள நிலையில், இந்திய தரப்பில் இதற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தராக செயல்படத் தயார் என்றார். மேலும் பிரதமர் மோடியும் தன்னிடம் காஷ்மீர் விவகாரத்திற்கு சுமூக தீர்வு ஏற்படுத்த உதவும்படி கேட்டிருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் காஷ்மீரில் மத்தியஸ்தம் செய்யுமாறு டிரம்பை பிரதமர் மோடி கேட்டதாக கூறியதை இந்திய வெளியுறத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்பட தயார் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். ஆனால் அப்படி எந்த ஒரு கோரிக்கையும் பிரதமர் மோடியால் முன்வைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இரு நாடுகளிடையேயான பிரச்சனைகள் உள்நாட்டு விவகாரத்துறை மூலமாக தீர்க்கப்படும். சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் இறுதி ஒப்பந்தம் இதற்கான தீர்வை ஏற்படுத்தி கொடுக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.
Discussion about this post