அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஆகியோர் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து பேசுகின்றனர்.
வியட்னாம் தலைநகர் ஹனோயிக்கு நேற்று இருநாட்டு அதிபர்களும் வந்தனர். அங்குள்ள நட்சத்திர விடுதியில் இரவு விருந்தில் இருவரும் கலந்துகொண்டனர். இருநாட்டு உறவுகள் குறித்து இன்றும் பேச்சுவார்த்தை நடக்கயிருக்கிறது.
இந்த சந்திப்பில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், டிரம்ப் மற்றும் கிம் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.