மனிதர்களை விட நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. குற்றச்சம்பவங்களுக்கு காவல்துறையினர் மோப்ப நாய்களை பயன்படுத்துகின்றனர். நாய்களின் மோப்ப சக்தி அபரிவிதமாக இருப்பதால் விஞ்ஞானிகள் மனிதர்களின் உடம்பில் இருக்கின்ற வியாதிகளை கூட அவைகளால் கண்டுபிடிக்கமுடியும் என்று நம்புகின்றனர். அதற்காக ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.நாய்களின் மோப்ப சக்தி மூலமாக மலேரியா நோயை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மலேரியா நோயில் உள்ள சிக்கல் என்னவென்றால், ஒரு சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி எதுவும் இன்றி தாக்குகிறது. எனினும், ரத்த பரிசோதனை மூலமாக இந்த நோய் தாக்கியுள்ளதா என்பதை கண்டறிய முடியும். இந்நிலையில், நாய்களின் மோப்ப சக்தி மூலமாகவும் மலேரியாவை கண்டறியலாம் என விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஆய்வு கவுன்சில் இதற்கான ஆய்வை ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் மேற்கொண்டது. அப்போது 5 முதல் 14 வயது வரையிலான, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கக்கூடிய குழந்தைகளின் காலுறைகள் சேகரிக்கப்பட்டது.
அவை அனைத்தும் நாய்களிடம் மோப்ப சக்திக்கு வழங்கப்பட்டது. அதில் 70 சதவிதம் பேருக்கு மலேரியா நோய் இருப்பதை மோப்ப நாய்கள் கண்டுபிடித்தன.
இந்த நோயை கண்டறிய நாய்களுக்கு மோப்ப சக்தி பயிற்சி அளிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இதேபோல் புற்றுநோய்கள், நீரிழிவு நோயினால் ஏற்படும் கோமா போன்றவற்றையும் கண்டுபிடிக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post