தஞ்சாவூர் அருகே எஜமானரை கடிக்க வந்த பாம்பை கடித்து கொன்ற வளர்ப்பு நாய் இறந்ததால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தஞ்சாவூர் அடுத்த வேங்கராயன்குடிகாட்டை சேர்ந்த நடராஜன் கடந்த 4 ஆண்டுகளாக வளர்த்து வந்த பப்பி என்ற ஆண் நாயை அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது, 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று நடராஜனை கடிப்பதற்காக சீறியுள்ளது. அதனை பார்த்த நாய் பாய்ந்து சென்று பாம்பை கடித்துள்ளது. பின்னர் நாய்க்கும் பாம்புக்கும் இடையே நடந்த கடுமையான சண்டையில், பாம்பு இறந்தது. வீட்டிற்கு வந்து கால்நடைமருத்துவருக்கு தகவல் கொடுத்து மருத்துவர் வருவதற்குள், நாய் பரிதாபமாக உயிரிழந்தது.