தமிழகத்தில் மின் வெட்டு ஏற்படாது என மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் – வாங்கல் காவிரி ஆற்று உயர் மட்ட பாலத்தில் 63 புள்ளி 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்பட்டுள்ள மின் விளக்கு வசதிகளை மின் துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வல்லூர் அனல் மின்நிலையத்தில் 1500 மெகாவாட் மின்னுற்பத்தித் தடைபட்டிருந்தாலும் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படாது என்றார்.
Discussion about this post