இன்றைய சூழ்நிலையில் ஹெட்போன்களை காதில் மாட்டிக்கொண்டு இருந்தால் தான் கெத்து என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.மிகவும் கவனமாக செல்லவேண்டிய அனைத்து இடங்களிலுமே ஹெட்போன்களை பயன்படுத்துகிறோம்.ரயில் நிலையம்,பேருந்தில் பயணம் செய்யும் போது,சாப்பிடும் போது என நமது அன்றாட வேலை அனைத்திலும் ஹெட்போன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.தற்போதெல்லாம் மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வாங்க செல்லும் போது கூட ஹெட்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
பல விபத்துகளுக்கு காரணமாக இந்த ஹெட்போன்கள் மாறிவிட்டது.ரயில்வே லெவல் கிராசிங்கில் காதில் ஹெட்போன்களை மாட்டிக்கொண்டு அதில் சத்தமாக பாட்டு கேட்டுக்கொண்டும் ரயில் வருவது கூட தெரியாமல் சென்று விபத்துக்குள்ளான செய்திகளையும் கேட்டுள்ளோம்.
ஒரு மனிதன் 4 நிமிடத்திற்கு மேல் தொடர்ச்சியாக ஹெட்போன் பயன்படுத்தினால் காதில் குறைபாடு ஏற்பட அதிகவாய்ப்புள்ளதாம்.மேலும் ஹெட்போனால் சிந்தினை திறன் குறைபாடு, ‘சென்ஸரி நியூரல் லாஸ்’எனப்படும் காது கேளாமை குறைபாடு மற்றும் காதில் சேரும் அழுக்குகள் ஹெட்போன் அழுதத்தால் உள்ளேயே தங்கிவிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று ,நின்றால்,நடந்தால்,சாப்பிடும் போதும் கூட ஹெட்போன்களை அனைவரும் மாட்டிக்கொள்கிறார்கள்.இன்றைய சூழ்நிலையில் ஹெட்போன் பயன்படுத்துவதை பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு ஆயுதமாக கையாள்கிறார்கள். மற்றவர்களிடம் மனம் விட்டு பேசினால் நம் மன அழுத்தம் குறையும் எனவும், ஹெட்போன் பயன்படுத்துவது நமக்கு மன ரீதியாக பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது எனவும் மனநல நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இளைய சமுதாயத்தினர் ஹெட்போன்களுக்கு மிகவும் அடிமையாகி விட்டனர்.எப்பயாவது பயன்படுத்த வேண்டிய ஒன்றை,என்றுமே பயன்படுத்துவது நிச்சயமாக ஆபத்தையே விளைவிக்கும் என்பதில் மாற்று கருத்தேயில்லை..இனியும் விழித்துகொள்ளாமல் இருப்பது நல்லதல்ல.
முதலில் உங்கள் ஹெட்போன்களை கழற்றிவிட்டு அருகில் உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்,மன அழுத்தங்கள் குறையும்.ஹெட்போன்களை பயன்படுத்துவது உங்கள் மன நிம்மதிக்கான தீர்வல்ல. அது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணிகளில் ஒன்று என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.
Discussion about this post