தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தீர்ப்பை மீறி, ஷாம்பு, சீயக்காய், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி குளிப்பவர்களை கண்டறிய பேரூராட்சி நிர்வாகம் சார்பில், கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் 2ஆம் சீசன் காலகட்டமான நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதத்தில் மேற்குறிப்பிட்ட பொருட்களை பயன்படுத்தி குளித்ததாக தலா ஒருவருக்கு 100 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆக மொத்தம் 40 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Discussion about this post