இந்துக்களின் நம்பிக்கையுடன் விளையாட வேண்டாம் என்று பா.ஜ.கவுக்கு சிவசேனா அமைப்பின் தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராமர் கோவில் விவகாரத்தை இந்து அமைப்பினர் தீவிரமாக கையில் எடுத்துள்ளனர். அதன் ஒருபகுதியாக சிவசேனா அமைப்பின் சார்பில் இன்று அயோத்தியில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. அதேசமயம் அயோத்தியில் பிரம்மாண்ட பேரணி நடத்தவும் இந்து அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே இன்று காலை சர்ச்சைக்குரிய இடத்திற்கு சென்ற சிவசேனா அமைப்பின் தலைவர் உத்தவ் தாக்கரே அங்கு ராமரை வழிப்பட்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை இருக்கும் நிலையில் ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வருவதை எது தடுக்கிறது என கேள்வி எழுப்பினார். மேலும் இந்துக்களின் நம்பிக்கையில் விளையாட வேண்டாம் என்றும் ராமர் கோவில் கட்ட உடனடியாக அவசர சட்டத்தை பா.ஜ.க கொண்டுவர வேண்டும் எனவும் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post