நீதிமன்ற உத்தரவை மீறி தேனியில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று திமுகவினர் வைத்த நூற்றுக்கணக்கான பிளக்ஸ் பேனரால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இவரை வரவேற்று திமுக பிரமுகர் தங்க தமிழ்ச்செல்வன் ஏற்பாட்டில் தேனி – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வரவேற்புக்கு அழைத்து வரப்பட்டவர்கள், சாலையை மறித்து நிற்பதாலும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பிளக்ஸ் பேனர்கள் வைக்க தேனி மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை மீறி திமுக மீண்டும் கட் அவுட் கலாச்சாரத்தை ஏற்படுத்தியதைக் கண்டு பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Discussion about this post