மத்தியில் 10 ஆண்டுகள் அங்கம் வகித்த திமுக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை: துணை முதல்வர்

10 ஆண்டுகள் மத்தியில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக நடாளுமன்ற வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து கோவையில் பிரசாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுகவின் காட்டுத் தர்பார் ஆட்சியை 2011ம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவந்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என தெரிவித்தார்.

அதிமுகவுக்கு மக்கள் தந்த ஆதரவு, சுனாமியாக மாறி திமுகாவை கடலில் தள்ளியதாகவும், ஆனால் இதுவரை திமுகவால் எழுந்திருக்க முடியவில்லை என சாட்டினார்.

Exit mobile version