கோவில்பட்டி அருகே நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழியை, திமுக தொண்டர்களே ஊருக்குள் நுழையவிடாமல் தடுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், தெற்குமயிலோடை கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற அத்தொகுதியின் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழியிடம், அப்பகுதி திமுக தொண்டர்கள், தங்களுக்கு திமுக எம்.எல்.ஏக்களோ அல்லது எம்.பிக்களோ இதுவரை ஒன்றுமே செய்ததில்லை என குற்றம்சாட்டினார். மேலும், அவர்கள், தூத்துக்குடி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ கீதாஜீவன், சாதி ரீதியாக பிரச்னையை தூண்டிவிடுவதாகவும், தேவேந்திர குல வேளாளருக்கு திமுகவினர் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் வேதனை குரலுடன் தெரிவித்தனர்.
அப்போது, கேள்வி கேட்டவர்களை திமுகவினர் தாக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, அங்கிருந்த காவல்துறையினர் இருதரப்பினையும் சமதானப்படுத்தினர். இதையெடுத்து பொது மக்கள் கனிமொழியை கிராமத்திற்குள் வரக்கூடாது என்று தெரிவித்தனர். இச்சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post