வாணியம்பாடி அருகே கர்நாடக அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய திமுக பிரமுகர்கள் 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த கர்நாடக அரசு பேருந்தை, அந்த வழியாக வந்த கார் ஒன்று முந்த முயன்றது. இதன் காரணமாக கார் ஓட்டுநருக்கும், பேருந்து ஓட்டுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், பேருந்து ஓட்டுநரை காரில் வந்தவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல் பேருந்து மீது கல்வீசியும் தாக்கியுள்ளனர். இதில் பயணிகள் 5 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தன்னை தாக்கியவர்கள் மீது பேருந்து ஓட்டுநர், அளித்த புகாரின் அடிப்படையில், காரில் வந்த திமுக பிரமுகர் சிவக்குமார், ராஜேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான வாணியம்பாடி திமுக நகர கழக பொறுப்பாளர் சாரதிக்குமார் உள்பட் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Discussion about this post