அதிமுக அரசு நலத்திட்டங்களை அறிவித்த போது நிதி ஆதாரம் குறித்து கேள்வி எழுப்பி வந்த ஸ்டாலினுக்கு, அதே கேள்வியை அரசியல் விமர்சகர்கள் முன்வைத்துள்ளனர்.
கடந்தாண்டு கொரோனா பரவலின் போது உலகமே முடங்கிய நிலையில், இந்தியாவும் முழு ஊரடங்கில் சிக்கி தவித்தது. அதிமுக அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அப்போது, ஊரடங்கினால் முடங்கிய பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும், பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட நோக்கிலும், பொங்கல் சிறப்பு தொகுப்புடன் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கும் திட்டத்தை, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தினார்.
ஆனால் இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பொதுமக்களின் கோபத்தை பெற்றது. உடனே இந்த சிறப்பு திட்டத்திற்கு அரசு எவ்வாறு நிதியை ஒதுக்கும்?, தமிழகத்தின் நிதி நிலைமை பலவீனமாக உள்ள நிலையில் இது சாத்தியமில்லை என்றெல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் வசை பாடினார்.
இருப்பினும் பொதுமக்கள் நலனை கருதி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் 2 ஆயிரத்து 500 வழங்கும் திட்டத்துக்கு, பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று அரசு டோக்கன் விநியோகம் செய்தது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து திமுக நீதிமன்றத்தை நாடியது. அனைத்தையும் தாண்டி சொன்னதை செய்து ஏழை குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில் இன்று முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள ஸ்டாலின், குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் 8 ஆயிரத்து 307 கோடி ரூபாய் செலவாகும் நிலையில் அதற்கான நிதி ஆதாரங்களுக்கு திமுக அரசு என்ன செய்யும்?, எவ்வாறு சமாளிக்கும்? என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
– பாம்பன் மு.பிரசாந்த்
Discussion about this post