மக்களுக்கான எந்தவொரு நலத்திட்டத்தை செயல்படுத்ததாக திமுக, பொய்யான வாக்குறுதிகளை கூறி வருவதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக செந்தில்நாதனை ஆதரித்து, அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வளர்மதி ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர். புஞ்சை புகலூர் ஒன்றியத்துக்குட்பட்ட புகளுர், வேலாயுதம்பாளையம், நான பரப்பு, ஹைஸ்கூல் மேடு, வள்ளுவர் நகர் போன்ற பகுதியில் பிரசாரம் செய்தனர்.
நாட்டிலேயே தமிழகம் தான் மின்வெட்டு இல்லாத மாநிலமாகத் திகழ்வதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். இப்பகுதி மக்களின் 50 ஆண்டு கனவான புஞ்சை புகலூர் தாலுகா உருவாக்கித் தந்தது அதிமுக அரசு தான் என்று குறிப்பிட்டார். மக்களை எந்தெந்த வகையில் ஏமாற்ற முடியுமே அந்த வகையில் திமுக ஏமாற்றி வருவதாக அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார். இனிமேலும் மக்கள் ஏமாறக்கூடாது என்றார்.
Discussion about this post