திண்டுகல்லில் திமுக பிரமுகருக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் வணிக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நெருங்கி வருவதையொட்டி திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக புகார் எழுந்தது. இதனை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்ணு வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள திமுக பிரமுகருக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் வணிக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையொட்டி 20 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இங்கிருந்து வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Discussion about this post