தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளில் ஒன்றாக இருக்கிறது. அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தி.மு.க. பொதுக்குழு கூட்டியது. அதனைத்தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம், திமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், தற்போது அக்கட்சித் தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வரும் 19ஆம் தேதி நடைபெற இருந்த தி.மு.க. பொதுக்குழு, தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version