திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு?

திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.  திமுக செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவார்  எனத் தெரிகிறது.   பொதுச் செயலாளராக நீண்ட காலமாக இருந்து வரும் அன்பழகனை,  அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, முதன்மை செயலராக இருக்கும் துரைமுருகனை நியமிக்க முடிவு செய்திருப்பதாகவும்  கூறப்படுகிறது.  மு.க.அழகிரிக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுக்கவும், கனிமொழிக்கு பொருளாளர் பதவி கொடுக்கவும் ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதாக  திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version