டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்தநிலையில் டெல்லி சென்று இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது எதிர்வரும் மக்களவை பொதுத்தேர்தல் குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும் சோனியா காந்தியிடம் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்தும் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோரும் உடனிருந்தனர்.
Discussion about this post