அனைத்து பிரச்சனைகளிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது: ராஜேந்திர பாலாஜி

அனைத்து பிரச்சனைகளிலும் திமுக இரட்டை வேடம் போடுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

உலக பால் தினத்தை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் பாலகத்தில், வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனை முகவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 500 இடங்களில் புதிய ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட இருப்பதாக கூறினார்.

இதனிடையே, அனைத்து பிரச்சனைகளிலும் திமுக இரட்டை வேடம் போடுவதாக கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்த திமுக, கடைசி வரை நிலம் கொடுக்கவில்லை என சுட்டிக் காட்டினார். 

Exit mobile version