கந்து வட்டி கொடுமையில் அயனாவரத்தை சேர்ந்த திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை, அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். திமுகவின் 98-வது வட்டச் செயலாளராக உள்ள இவர், சசிகுமார் என்பவருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு 30 ஆயிரம் ரூபாயை வட்டியாக பிடித்துக் கொண்டு, 70 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் தெரிகிறது. 6 மாதங்கள் கடந்த நிலையில், பணம் கேட்டு சசிகுமார் வீட்டுக்கு சென்ற பாஸ்கர், தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. சசிகுமாரின் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சசிகுமார், கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாஸ்கரின் அலுவலகத்துக்கு வந்து, அங்கிருந்த கண்ணாடி மீது கற்களால் வீசி தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சசிகுமாரை கைது செய்துள்ளனர். மேலும், கந்து வட்டி கொடுமைப்படுத்திய பாஸ்கரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Discussion about this post