கூட்டத்தில் பங்கேற்க ஆட்களை பணம் கொடுத்து அழைத்து வந்த திமுக

திமுக செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்க ஆட்களை பணம் கொடுத்து அழைத்து வந்தது அம்பலமாகியுள்ளது.

நாமக்கலில் தனியார் மண்டபத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு, வெட்ட வெளியில் வெளிப்படையாக பணம் கொடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், பெண்கள் அழைத்துவரப்பட்டனர். பணம் கொடுத்து அழைத்துவரப்பட்ட மூதாட்டிகள், கொளுத்தும் வெயிலில் சரக்கு வாகனங்களில் அமரவைக்கப்பட்டனர். அதே நேரம் கட்சி நிர்வாகிகள் குளிர்சாதன வசதி கொண்ட அறைகளில் அமர்ந்திருந்தனர்.

இது மட்டும் இன்றி கூட்டத்திற்கு வந்தவர்களின் வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டதால் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படும் திமுகவினரின் அராஜகம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசியல் பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version