நிலமோசடி விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் ரட்சகன் மகன் சந்தீப் ஆனந்துக்கு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சென்னை குரோம்பேட்டையிலுள்ள குரோம் லெதர் தொழிற்சாலைக்கு சொந்தமான நிலங்கள், கடந்த1982ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் நகர்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அரசுடமை ஆக்கப்பட்டது. அந்த நிலங்கள் நீர் ஆதாரத்துக்கு பயன்படும் வகையில், 1984ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், 1996 ம் ஆண்டில், குரோம் லெதர் தொழிற்சாலை தலைவராக இருந்த ஜெகத் ரட்சகன் 1 புள்ளி 55 ஏக்கர் நிலத்தை, விதிகளை மீறி 41 பயனாளிகளுக்கு பிரித்து கொடுத்துள்ளார். நீர் ஆதார நிலங்களை தனிநபருக்கு பிரித்து கொடுத்தது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில், சிபிசிஐடி விசாரணை நடத்துமாறு, சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், எழும்பூரிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு, சந்தீப் ஆனந்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே, இலங்கையில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்தது தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் ரட்சகனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post