தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்ற தி.மு.க. எம்.பி-யின் ஆசை நிறைவேறாது என்றும், தொற்றின் தாக்கத்தை குறைக்க அரசு அனைத்து விதத்திலும் தயாராக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புதிய ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 120 படுக்கைகள் கொண்ட வார்டினை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் சதவீதம் 10-ற்கும் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்த வாரம் தொற்றின் தாக்கம் அதிகரித்து, அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் இருக்காது என்று தி.மு.க. எம்.பி ட்வீட் செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தி.மு.க. எம்.பியின் ஆசை என்றும் நிறைவேறாது என்று கூறினார்.