திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை கொறடாவுமான சக்கரபாணி எம்.எல்.ஏ சாதிய வன்மத்தோடு நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளநிலையில், அவரை கண்டித்து பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் மாவட்டம் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்ட உள்ளனர்.
ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சக்கரபாணி, திமுக சட்ட மன்ற உறுப்பினராகவும் மேற்கு மாவட்ட செயலாளராகவும் சட்டப்பேரவை திமுக கொறடாவாகவும் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் எரியோடு பகுதியைச் சேர்ந்த திமுக மேற்கு மாவட்ட துணைச் செயலாளரான ஜீவா என்பவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஜீவாவை சாதிய வன்மத்தோடு சக்கரபாணி நீக்கியதாகவும் சாதிய அரசியல் செய்யும் அவருக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறி மாவட்டம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் மூலம் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனையடுத்து, பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் சக்கரபாணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post