சிறுபான்மையின மக்களின் பாதுகாவலன் என கூறிக்கொள்ளும் திமுகவினர், சென்னையில் இஸ்லாமிய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரை பகுதியில் தெக்லான் பாகவிக்கு ஆதரவாக இரண்டு இஸ்லாமிய பெண்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த திமுக அண்ணா நகர் பகுதி செயலாளர் பரமசிவம் என்பவர் தலைமையில் சுமார் 10 பேர் 2 பெண்களையும் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக தெஹ்லான் பாகவி தரப்பினர் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தங்களை சிறுபான்மை மக்களின் பாதுகாவலான காட்டிக்கொள்ளும் திமுகவினர், இஸ்லாமிய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் சிறுபான்மையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.