புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவிற்காக வியாபாரிகளிடம் கட்டாய வசூல் செய்ததாக திமுகவினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையிலுள்ள ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய திருவிழா பணிகளுக்காக அப்பகுதியில் நிலத்தை குத்தகை எடுத்து, கடை அமைக்கும் வியாபாரிகளிடம் இருந்து 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திமுகவினர் அடாவடி வசூல் செய்துள்ளனர். இதனால் பணத்தை இழந்ததையடுத்து வியாபாரிகள் மற்றும் நில உரிமையாளர்கள் இணைந்து திமுக வினர் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
கே.ஆர்.ஆர்.ரமேஷ் ,ஸ்ரீனா கண்ணன், ராமமூர்த்தி, உள்ளிட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இழந்த பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என்றும், வியாபாரிகள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.