ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை கொண்டு வந்து அதற்கு கையெழுத்திட்ட திமுக தலைவர் ஸ்டாலின், அந்த திட்டங்களை எதிர்ப்பதை போல் தற்போது இரட்டை வேடம் போடுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக்காலத்தில் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் கொண்டுவரப்பட்ட பெட்ரோல் கெமிக்கல் திட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்பதாக கூறினார்.
Discussion about this post