மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவதாகவும், திமுகவை ஸ்டாலினே அழித்து விடுவார் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தியை ஆதரித்து பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்றும், அதன் ஆலோசகர் உதயநிதி ஸ்டாலின் இவர்களாலேயே திமுக அழியும் என்று கூறினார்.
சட்டசபையில் சட்டையை கிழித்துக் கொண்டு சாலை மறியல் செய்து விட்டு, மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.