முதுகுளத்தூர் பகுதிகளில், திமுகவினர், தேர்தல் விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து திமுக சார்பில் கண்ணப்பன் பிரசாரம் செய்தார். அப்போது, அவர், தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தார்.
அவருடைய பிரசார வாகனத்தின் முன்பும் பின்பும் ஏராளமான வாகனங்கள் சென்றன. திமுகவினர் தேர்தல் விதிகளை மீறியதால் கடுமையான போகுவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் நெரிசலில் சிக்கித் தவித்தனர்.