திமுக ஒரு வன்முறை கட்சி – ராமதாஸ் விமர்சனம்

திமுக ஒரு வன்முறை கட்சி என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் மத்திய சென்னை தொகுதியில் பாமக வேட்பாளர் சாம் பால் போட்டியிடுகிறார். இதனையொட்டி வேட்பாளர் அறிமுக கூட்டம் சேத்துப்பட்டில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பொன்னையன் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், திமுக ஒரு வன்முறை கட்சி என கூறினார். 8 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்களுக்கு அதிருப்தி இல்லை எனவும் பாராட்டு தெரிவித்தார்.

Exit mobile version