ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் திமுகவினர், ஊழியர்களை தாக்கிவிட்டு சிசிடிவி கேமரா மற்றும் Hard disk-கை தூக்கிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகே நகராட்சி வணிக வளாகத்தில் தனியார் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு, உணவு அருந்துவதற்காக தமது மகனோடு வந்த திமுகவை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தலைவரான இளங்கோ, உணவு வழங்க தாமதமானதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், உணவக ஊழியர் மணிகண்டனை இளங்கோ தகாத வார்த்தைகளில் திட்டியதோடு தாக்கவும் செய்துள்ளார். இதனை, தட்டிக்கெட்ட உணவகத்தின் உரிமையாளரையும், அங்கு வந்த திமுக குண்டர்கள் தாக்கியுள்ளனர். உணவகத்தில் பதிவான சிசிடிவி Hard disk இருந்த பெட்டியை திமுக குண்டர்கள் தூக்கிச் சென்றனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post