நிலக்கோட்டை அருகே திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டத்தில், பெண்களுக்கு பணப்பட்டுவாட செய்த காட்சியை படம் பிடிக்க முயன்ற செய்தியாளருக்கு அக்கட்சியினர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிராமங்களில் இருந்து பெண்கள், பள்ளிக் குழந்தைகள், முதியவர்கள் விதிமுறைகளை மீறி டெம்போக்களில் அழைத்து வரப்பட்டனர்.
கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு மேடையின் அருகே திமுகவினர் பணப்பட்டுவாடா செய்தனர். இதனை படம் பிடிக்க சென்ற செய்தியாளர் ஒருவரை தாக்க முயன்ற திமுகவினர், கேமராவையும் பறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிராமசபை கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களே எழுதிக் கொடுத்த குறைகளை படித்தனர். கூட்டத்தில் கடைசி வரை பேச வாய்ப்பு அளிக்காததால் அதிருப்தியடைந்த இளைஞர்கள் சிலர், தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் என ஸ்டாலினின் வாகனம் முன்பு முழக்கமிட்டனர்.