ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மட்டதாரி கிராமாத்தைச் சேர்ந்த மக்கள், ஊராட்சி மன்ற தலைவரான திமுகவை சேர்ந்த பிரேம்குமார் ஆதிதிராவிடர் மேம்பாடு பிரிவின் கீழ் பட்டியலின மக்களுக்கு வழங்க கூடிய இலவச வீட்டுமனையை அவரது ஆதரவாளர்களுக்கு மட்டும் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகள் இன்றி சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் அரசு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச வீட்டுமனையை தகுதி உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post